கரடியின் ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!
மும்பை: கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா மீதான அமெரிக்க அதிபர் விதித்த கட்டணங்களால் உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களை மீண்டும் எழும்பியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.
முதலீட்டாளர்கள் பார்வையானது தற்போது, பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை அறிவிப்பின் மீது உள்ள நிலையில், மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் பங்குகள் தலா 1 சதவிகிதமும் அதே வேளையில் ஸ்மால்கேப் பங்குகள் தலா 1.8 சதவிகிதம் உயர்ந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 731.91 புள்ளிகள் சரிந்து 76,774.05 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 23,239.15 புள்ளிகளாக வர்த்தகமானது. அதே வேளையில், வர்த்தகநேர முடிவில், சென்செக்ஸ் 319 புள்ளிகள் குறைந்து 77,187 ஆகவும் நிஃப்டி 121 புள்ளிகள் சரிந்து 23,361 ஆகவும் முடிந்தது.
இன்று 2,928 பங்குகள் வர்த்ககமான நிலையில், 787 பங்குகள் உயர்ந்தும் 2,063 பங்குகள் சரிந்தும் 78 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.
பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இரண்டு குறியீடுகளும் கடந்த செப்டம்பர் 27ல் முதல் அவற்றின் சாதனை உச்சத்தை விட கிட்டத்தட்ட 10 சதவிகிதம் சரிந்து வர்த்தகம் ஆனது.
இன்று நால்கோ, வேதாந்தா, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 4 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.
பட்ஜெட்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் குறித்த குறைவான மீட்டெடுப்புகளை ஈடுசெய்ய ஏற்பாடுகள் இல்லாததால், முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றியதால் இந்துஸ்தான் பெட்ரோலியம் 6 சதவிகிதமும், பாரத் பெட்ரோலியம் 4 சதவிகிதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கிட்டத்தட்ட 4 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.
பிஎஸ்இ-யில் டாப் 30 பங்குகள் கொண்ட ப்ளூ-சிப் பேக்கிலிருந்து லார்சன் அண்ட் டூப்ரோ, என்டிபிசி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் டைட்டன், மாருதி, நெஸ்லே, பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஹாங்காங் உள்ளிட்டவை சரிந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சனிக்கிழமையன்று ரூ.1,327.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.70 சதவிகிதம் வரை உயர்ந்து பீப்பாய்க்கு 76.20 அமெரிக்க டாலராக உள்ளது.