செய்திகள் :

கரடியின் கட்டுப்பாடில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் சரிவு!

post image

மும்பை: அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் குறித்தும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய ப்ளூ சிப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் இன்று எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றியதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெகுவாக சரிந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 350.98 புள்ளிகள் சரிந்து 81,397.59 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.8 புள்ளிகள் குறைந்து 24,567.45 புள்ளிகளாக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், நெஸ்லே, லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் உயர்ந்தும் வர்த்தகமானது.

இதையும் படிக்க: மாருதி சுஸுகி விற்பனை 10% உயா்வு

ஆட்டோமொபைல், பைனான்சியல், மெட்டல், எண்ணெய் & எரிவாயு உள்ளிட்ட துறைகளின் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தன. அதே வேளையில், இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து 80,684.45 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 332.25 புள்ளிகள் சரிந்து 24,336.00 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஸ்ரீராம் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் ஆகியவை நிஃப்டியில் அதிகமாக சரிந்த நிலையில், ஐடிசி மற்றும் சிப்லா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.

அனைத்து துறை குறியீடுகளும் இன்று சரிந்த நிலையில் ஆட்டோ, வங்கி, எரிசக்தி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு தலா 1 சதவிகிதம் சரிந்தது.

ஓபராய் ரியால்டி, மேக்ஸ் ஹெல்த்கேர், கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ், கோஃபோர்ஜ், இந்தியன் ஹோட்டல்ஸ், 360 ஒன் வாம், பேடிஎம், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், கேப்லின் லேப்ஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோ எட்ஜ், கோரமண்டல் இன்டர்நேஷனல் உள்ளிட்ட 270 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.

இதையும் படிக்க: மொத்த விலை பணவீக்கம் 3 மாதங்கள் காணாத சரிவு

ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்தும் டோக்கியோ சற்று உயர்ந்து முடிந்தது. வால் ஸ்ட்ரீட் நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தது.

உலகளவில், பங்குச் சந்தைகள் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் முடிவை எதிர்நோக்கி உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் ஃபெட் நகர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.278.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.14 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 73.81 டாலராக உள்ளது.

நேற்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து 81,748.57 புள்ளிகளிலும், நிஃப்டி 100.05 புள்ளிகள் சரிந்து 24,668.25 ஆக நிலைபெற்றது.

2025ல் விற்பனைக்கு வரும் புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் !

ஹைதராபாத்: ஸ்மார்ட்ஃபோன்கள் சக்திவாய்ந்த டிஜிட்டல் நுழைவாயில்களாக தற்போது உருவாகியுள்ளன. இந்த நிலையில், தொழில்நுட்ப உலகில் மிகவும் பரபரப்பான வெளியீடுகளில் இந்த ஆண்டும் ஒன்றாக தெரிகிறது. இது இளைய தலைம... மேலும் பார்க்க

தனியாா் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 34% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் சொந்தப் பயன்பாட்டுக்காகவும் வா்த்தகத்துக்காகவும் தனியாா் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி உற்பத்தி 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நி... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா பங்குகள் 4% உயர்வு!

மும்பை: உலகளாவிய பலவீனமான சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது இரண்டு மாத உச்சத்தை எட்டியது.இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) மற்று... மேலும் பார்க்க

ஹீரோ மோட்டோகார்ப் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிவு!

புதுதில்லி: தேசிய பங்குச் சந்தையில், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை இன்று 3.4 சதவிகிதம் குறைந்து ரூ.4,162.45 ஆக சரிந்தது. ஹீரோ மோட்டோகார்ப் டிசம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை தரவுகளை அறிவித்ததையடுத்து... மேலும் பார்க்க

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்றது மிகப்பெரிய வெற்றி: ரிசர்வ் வங்கி

மும்பை: புழக்கத்தில் உள்ள ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவிகிதம் வங்கி அமைப்புக்கு திரும்பி வந்துவிட்டதாகவும், அத்தகைய நோட்டுகள் ரூ.6,691 கோடி மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வ... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.79-ஆக முடிவு!

மும்பை: இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்த நிலையில், உள்நாட்டில் பங்குச் சந்தை வணிகமானது முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்ததால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 4 காசுகள் சரிந... மேலும் பார்க்க