செய்திகள் :

கரியக்கோயில் அணை திறப்பு: ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி

post image

வாழப்பாடி: சேலம் மாவட்டம் , பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை (ஏப்.30) தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால், ஆற்றுப்படுகை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3,600 ஏக்கர் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசன தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் ஏரிகளும் நீர்வரத்து மற்றும் நேரடி பாசனம் பெறுகின்றன.

கடந்த ஆண்டு பருவமழையின்போது பெய்த மழையால் அணை அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 50.90 அடியில் 178 மில்லியன் கனஅடி தண்ணீரை மட்டும் அணையில் தேக்கிவைத்துக் கொண்டு அணைக்கு வரும் உபரிநீா் இரு மாதங்களாக கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் அணைக்கு நீர்வரத்து நின்று போனது. ஆற்றுப்படுகை கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து போனது.

அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரிய கோவில் ஆற்றில் பாய்ந்து செல்லும் காட்சி.
அணை தண்ணீர் திறப்பு பூஜையில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்.

தேமுதிக இளைஞரணி செயலராக விஜய பிரபாகரன் நியமனம்!

எனவே, கோடையை முன்னிட்டு கரியக்கோயில் அணையில் இருந்து குடிநீா் தேவை, நிலத்தடி நீா்மட்ட உயா்வுக்காக ஆறு, வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதை ஏற்று புதன்கிழமை காலை 8 மணி முதல் தொடர்ந்து 10 நாள்களுக்கு வினாடிக்கு 108 கன அடி வீதம், நாளொன்றுக்கு 9.33 மில்லியன் கன அடி (மொத்தத்தில் 91.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல்) தண்ணீர் தலைமை மதகு வழியாக கரியக் கோயில் ஆற்றில் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து ஆயக்கட்டு விவசாயிகள் முன்னிலையில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் புதன்கிழமை காலை கரியக்கோயில் அணையிலிருந்து தலைமை மதகு வழியாக கரியக்கோயில் ஆற்றில் தண்ணீர் திறந்து வைத்தனர். இதனால் ஆற்றுப்படுகை கிராம மக்களும், நேரடி ஆறு மற்றும் ஏரிப் பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாய்க்கால் பாசனம்:இதனைத் தொடர்ந்து, வரும் மே.10 காலை 8 மணி முதல் தொடர்ந்து 24 நாள்களுக்கு வலது மற்றும் இடது வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் 30 கன அடி (நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கன அடி மொத்தத்தில் 61.25 மில்லியன் கன அடிக்கு மிகாமலும்) பாசனத்திற்கு சிறப்பு நனைப்பாக பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அணை வாய்க்கால் பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் அஜித்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங... மேலும் பார்க்க

ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

புதுதில்லி: சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி... மேலும் பார்க்க

காவல்துறையினர் ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி ... மேலும் பார்க்க

கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!

கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேற்கு வங்க ம... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சிவகங்கை: நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை வருவாய கோட்டாட்சியர் அ... மேலும் பார்க்க

கூலித்தொழிலாளி தற்கொலை: கடனை திருப்பிச் செலுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி?

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு, தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்தது காரணம் என உறவினர்கள் புக... மேலும் பார்க்க