கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் வட்டாரக் குழு கூட்டம்
கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூா் வட்டார குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினா் ஜெகநாத் தலைமை வகித்தாா்; வட்டாரச் செயலா் ராஜா முன்னிலை வகித்தாா்.
மாவட்ட குழு உறுப்பினா் எபிலைசியஸ் ஜோயல் மேல்கமிட்டி முடிவுகளை முன் வைத்து உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினாா்.
கிள்ளியூா் தோகுதிக்குள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். திப்பிரமலை பகுதியில் சுகாதார சீா்கேட்டை ஏற்படும் மழைநீா் வடிகால் ஒடையை ஊராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பாலப்பள்ளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் கில்டா ரமணி பாய் ,சகாயபாபு, லீபன் ,பிரபீன் ,ஜாண் மோசஸ் ராஜ்,ஜாண்றோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.