ஜெர்மனி யூதர்களை உளவுப் பார்க்கிறதா ஈரான்? டென்மார்க்கில் ஒருவர் கைது!
'கருணாநிதியின் இறுதி மூச்சில் கொடுத்த வாக்குறுதி' - ஸ்டாலினுக்கு வைகோ கொடுத்த மெசேஜ்
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2026 தேர்தலில் எங்கள் கூட்டணி பிரமாண்ட வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இங்கு கூட்டணி அரசுக்கு வேலை இருக்காது.

டாக்டர் கலைஞரின் இறுதி மூச்சு பிரியும்போது, ‘உங்களுக்கு எப்படி 30 ஆண்டுகள் உறுதுணையாக இருந்தேனோ.. அதை போல ஸ்டாலினுக்கும் துணை நிற்பேன்.’ என்று கூறினேன். அப்போது கலைஞர் என் கையை பிடித்து கொண்டார்.
அவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது. அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை நான் கடைசிவரை உறுதியாக காப்பாற்றுவேன். அந்த முடிவைத்தான் நிர்வாக குழுவிலும் எடுத்துள்ளோம். திமுகவுக்கு வெற்றியை தேடித்தர மதிமுக முழு மூச்சுடன் பணியாற்றும். இந்த அரசுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை.
அறிக்கை கூட விட்டதில்லை. சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கி கொண்டிருக்கிறார்கள். இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, இளைஞர்களுக்கு என்று பல திட்டங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
திமுக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை!
பாஜக – அதிமுக கூட்டணியில் அடுத்து யார் சேர்வார்கள் என்று பேச்சு எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லோரும் மிகவும் உறுதியாக இருக்கின்றனர். திருப்புவனம் இளைஞர் மீது எந்த குற்ற பின்னணியும் இல்லை. காவல்துறை அவரை அடித்து, உதைத்து சித்திரவதை செய்து சாகடித்துள்ளனர்.

அரசு உடனடியாக 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடைபெற வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.” என்றார்.