செய்திகள் :

கருப்புலீஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா!

post image

பழமை வாய்ந்த கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

வேலூர், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள பழமையான புகழ்பெற்ற கருப்புலீஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இன்று சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெல்லூர்பேட்டை மாட வீதிகள் வழியாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உற்சவர் மீது உப்பை தூவி தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதில் குடியாத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

ஸ்வியாடெக், கீஸ் அதிா்ச்சித் தோல்வி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் சனிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா். மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போ... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலால் வீடுகள் சேதம் - புகைப்படங்கள்

ஜம்முவில் ட்ரோன் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்யும் பாதுகாப்புப் படையினர்.தாக்குதலால் சேதமடைந்த வாகனங்களுக்கு அருகில் நிற்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள்.பாகிஸ்... மேலும் பார்க்க

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்!

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததா... மேலும் பார்க்க