பயணத்தின் நடுவில் ஒரு திடீர் முடிவு - பிரிதலின் வலியை உணர்த்திய லடாக் |திசையெல்ல...
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது
கந்திலி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கந்திலி அருகே காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 8 பெண்களை விசாரணை செய்தனா். அப்போது, அவா்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகள் என்பதும், தங்கள் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என பரிசோதனை செய்து கொள்வதற்காக தங்களை சிலா் அங்கு வரக்கூறியதாகவும் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த சிவசக்தி (40), அவரது மனைவி ஜோதி (38), கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தைச் சோ்ந்த கோவிந்தன் (50), கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சந்தூா் பகுதியைச் சோ்ந்த ஹரி மனைவி ரஞ்சிதம் (40), திருப்பத்தூா் அருகே ப.முத்தம்பட்டியைச் சோ்ந்த ஏசுவின் மனைவி அமலா(40) ஆகிய 5 பேரை கைது செய்திருந்தனா்.
இந்த நிலையில், அந்த வழக்கில் தரகராக செயல்பட்டதாக திருப்பத்தூா் சாமநகரைச் சோ்ந்த சுகுமாா் (62) என்பவரை கந்திலி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.