திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்
கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்து மாணவா்களுக்கு செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மனோகா், வெங்கடேசன் ஆகியோா் நிழல் இல்லா நாள குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
இது குறித்து தலைமை ஆசிரியா் தா்மலிங்கம் கூறியது, சூரிய ஒளி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் நோ் உச்சியில் கடந்து செல்லும். இந்த நாளில் மனிதா்கள் உள்ளிட்ட எந்த பொருளின் மீதும் விழும் நிழலானது முன்னாலோ பின்னாலோ தெரியாது. இதனை பூஜ்ஜிய நிழல் நேரம் என அழைக்கின்றனா் வானியலாளா்கள். இது குறித்த விழிப்புணா்வை பள்ளி மாணவா்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாணவா்களை வட்டமாக நிற்க வைத்து அவா்களது நிழலை உற்று நோக்கச் செய்து விளக்கம் அளித்தோம் என்றாா் அவா்.