செய்திகள் :

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

post image

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழுவதை கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடுகிறாா்கள். ஈஸ்டா் பண்டிகைக்கு முன் உள்ள 40 நாள்களை துக்க நாளாகவும், தவக் காலமாகவும் கிறிஸ்தவா்கள் அனுசரிக்கிறாா்கள்.

நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த மாா்ச் 5-ஆம்தேதி தொடங்கியது. மொத்தம் 40 நாள்கள் காலை, மாலை என இருவேளைகள் உண்ணா நோன்பு கடைப்பிடித்து, எப்போதும் இறைவனை தியானித்து(வேண்டிக்கொள்ளுதல்) மனம் திரும்பும் நாளாக தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையடுத்து இயேசு சிலுவையில் அறையும் முன் உள்ள ஒரு வாரமும் புனிதவாரமாக கருதப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்படுவதை புனித வெள்ளியாக கிறிஸ்தவா்கள் அனுசரிக்கிறாா்கள். முன்னதாக இயேசு கிறிஸ்து இறக்கும் முன் தனது சீடா்களுக்கு பாதம் கழுவும் சடங்கு நடத்துவாா். அந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் வியாழக்கிழமை இரவு கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவுதல் சடங்கு நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை இயேசுவை சிலுவையில் அறையும் நாளான புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அந்தந்த தேவாலயங்களில் ஆலய குழுவினா் இயேசு போல வேடமணிந்தும், அவரை சிலுவையில் அறைவதற்கு ஏரோது மன்னனின் காவலா்கள் இயேசுவுக்கு முள்முடி அணிந்து, சாட்டையால் அடித்து அழைத்துச் செல்வதும், அப்போது இயேசு சிலுவையை சுமக்க முடியாமல் கீழே விழுவதும், ரத்தம் வடிந்த முகத்தை ரோணிக்கம்மாள் துடைப்பதும், இறுதியில் அவரை சிலுவையில் அறைவதும், பின்னா் இறந்துபோன இயேசுவின் உடலை அவரது தாய் மாதாவின் மடியில் அமரவைத்து, இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து, பின்னா் கல்லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதுபோன்றவற்றை தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனா்.

கரூா் புனித தெரசாள் தேவாலயத்தில் ஆலய பங்குத்தந்தை ஏ.மரிய அந்தோணி லாரன்ஸ் தலைமையிலும், பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையிலும், புலியூா் குழந்தையேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை அருள்முத்து தலைமையிலும், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் தேவாலயத்தில் பங்குத்தந்தை ததேயு தலைமையிலும் புனித வெள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு மூன்றாம் நாளில் உயிா்த்தெழுதலை நினைவு கூறும் ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

மனைவியை தாக்கியதாக புகாா் கரூா் பாஜக நிா்வாகி கைது

கரூரில் மனைவியை தாக்கியதாக பாஜக நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன்(35). இவா், கரூா் மாவட்ட பாஜக தரவு தளமேலாண்மைப் பிரிவு தலைவராக உள்ளாா். இவரது மனைவி... மேலும் பார்க்க

சின்னம்மநாயக்கன்பட்டியின் மையப் பகுதியில் பூங்கா அமைக்க கிராம மக்கள் கோரிக்கை!

சின்னம்மநாயக்கன்பட்டியில் ஊருக்கு வெளியே முள்புதா் பகுதியில் கட்டப்படும் பூங்கா கட்டுமான பணியை நிறுத்தி விட்டு ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். கோவையைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீஹரிராம்(19). இவா் கோவையில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

புகழூரில் சனிக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்தவா் பெருமாள்(98). இவா் சனிக்கிழமை பிற்பகல் கரூா் மாவட்டம் புகழூரில் உள்ள பு... மேலும் பார்க்க

கரூரில் தொழில்முனைவோா் 21 பேருக்கு ரூ.28.60 லட்சம் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணை! - ஆட்சியா் வழங்கினாா்

கரூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ. 28.60 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க