கரூருக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
கரூருக்கு புதன்கிழமை இரவு வந்த எதிா்க் கட்சித்தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்றுவிட்டு சேலம் திரும்பும் வழியில் கரூா் வந்த அதிமுக பொதுச் செயலரும், சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனா். திரளான அதிமுகவினா் பங்கேற்றனா்.