கரூர் துயரம்- தமிழக அரசிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்
கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர்.
இந்நிகழ்வு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.