தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கரூர் பலி: எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான்; அண்ணாமலை
கரூர் துயரச்சம்பவத்தில் எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரூர் துயரச்சம்பவத்தில் 40 அப்பாவிகளை பறிகொடுத்துள்ளோம். இன்னும் கவலைக்கிடமாய் சிலர் உள்ளனர். அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழகத்தில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை.
இனியும் நடக்கக்கூடாது பலியானவர்கள் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்; இதை கருத்தில் கொண்டு கரூர் பாஜக சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் கொடுக்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உதவ தீர்மானித்துள்ளோம்.
எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான். முதல் தவறு மாவட்ட நிர்வாகம், காவலர்கள் மீதுதான். அவர்கள் உரிய இடத்தை கொடுக்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வாய்ப்பே இல்லையென தெரிந்தபோதும் ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? சரியான இடத்தை கொடுப்பது அரசின் கடமை.
கரூர் பலி: ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை - அண்ணாமலை
முடியவில்லை என்றால், கூட்டத்திற்கு அனுமதியே கொடுக்காதீர்கள். அஜித் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது போல கரூர் சம்பவத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். விஜய் மேலான குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன். கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
விஜய் இதிலிருந்து மீண்டு வர வேண்டும், மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.