நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
கரூர்: மதுபோதையில் தகராறு; சித்திரவதை தாங்காமல் கட்டையால் அடித்த மனைவி, கணவன் மரணம்..
கரூர், ராயனூர் தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், கூலி தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு இவர்களின் மகன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், சந்திரசேகருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு வருவாராம். அதோடு, தனது மனைவியோடு தகராறில் ஈடுபட்டு வருவாராம். அப்படி, குடிபோதையில் இருந்த சந்திரசேகர் மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சந்திரசேகருக்கும், சரண்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டானதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஒருகட்டத்தில் சித்திரவதை தாங்காமல் ஆத்திரமடைந்த சரண்யா வீட்டில் கிடந்த கட்டையால் சந்திரசேகரின் பின்தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், காலை சந்திரசேகர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்திரசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை குறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து சரண்யாவை கைது செய்தனர்.
`மதுபோதையில் நடக்கும் தகராறு சம்பவங்கள், மரணங்கள் அதிகரிப்பதால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது' என சமூக ஆர்வலர்கள் மிகுந்த வேதனையுடன் கூறுகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
