ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு...
கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை நூற்றாண்டு விழா
கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா பிப். 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் நூறு ஆண்டுகளைக் கடந்த பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1880-இல் துவங்கப்பட்டு நூற்றாண்டுகளையும் கடந்த நிலையில் பிப்.2-ஆம்தேதி பள்ளியில் நூற்றாண்டு விழா, பள்ளி ஆண்டு விழா, நூற்றாண்டு நினைவுத்தூண் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
விழாவுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று பேசுகிறாா்.
விழாவில் முன்னாள் ஆசிரியா், ஆசிரியைகள் கெளரவிக்கப்பட உள்ளனா். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளா்களும், முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகளுமான வி.என்.சி.பாஸ்கா், விசா.சண்முகம், அப்னாதனபதி, ஜி.சிவராமன், ஓய்வுபெற்ற பேராசிரியா் ராஜன் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.