செய்திகள் :

கர்நாடக பதிவெண் கன்டெய்னர் லாரி; கடத்தி வரப்பட்ட1400 கிலோ குட்கா பொருட்கள் - மதுரை அதிர்ச்சி

post image

கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக மதுரை மாநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கடத்தல் லாரி

இதனையடுத்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பெயரில் புதூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீஸார் புதூர் அருகே சர்வேயர் காலனி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது KA 04 AB 5492 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் கண்டெய்னரை திறந்து சோதனையிட்டனர். அப்போது உள்ளே குழந்தைகளுக்கான அழகு சாதன பொருட்கள், கோழித் தீவனம், கால்நடைகளுக்கான மருந்து பெட்டிகள் இருந்துள்ளதும் அதன் நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், புகையிலை உள்ளிட்ட குட்கா பொருட்கள் 94 மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் கன்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து வந்த கார் மற்றும் சரக்கு வாகனங்களின் மீது சந்தேகம் ஏற்பட்டு தடுத்து நிறுத்தி விசாரித்தபோது கன்டெய்னர் லாரியில் வரும் குட்கா பொருட்களை சில்லறை வியாபாரத்துக்காக வாங்க வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கன்டெய்னர் லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துசென்று அதிலிருந்த 1400 கிலோ கூல் லிப் மற்றும் புகையிலை உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கூடவே சில்லறை விற்பனைக்காக வாங்க வந்த வந்தவர்களின் கார் மற்றும் சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவருடன் சேர்த்து 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

குட்கா

குட்கா பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு அதிகளவிற்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் 1400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் கொடுமை முயற்சி தோல்வி; சிறுமிகளை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை - சமையல்காரர் கைது!

புனேயில் மைனர் சிறுமிகள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புனே ராஜ் குரு நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்தவர் அஜய்தாஸ் (54). அதே கட்டடத்தில் தனது பெற்றோருட... மேலும் பார்க்க

தவறாக நடக்க முயன்ற நபர்; சாமர்த்தியமாகச் செயல்பட்ட பெண்... தர்ம அடியுடன் போலீஸில் ஒப்படைப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமணி (பெயர் மாற்றம்). இவரின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் ரமணி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மகள்களும் மகனும... மேலும் பார்க்க

பிரேதப் பரிசோதனை முடிந்து தகனம்... இறந்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வந்தது எப்படி? தேனியில் அதிர்ச்சி!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட மலைகிராமமான தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 37. இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 7 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். மணிகண்டனுக்கு இருந்த க... மேலும் பார்க்க

'பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில்...' - அண்ணா பல்கலை., மாணவி விவகாரம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் தமிழகமெங்கும் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அதிமுகஉள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்து போராட்டங்களைநடத்தி வ... மேலும் பார்க்க

திருப்பத்தூர் : வாழைத் தோப்பில் ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி; வேலைக்கு சென்ற கணவன் கொடுத்த ட்விஸ்ட்

திருப்பத்தூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 39 வயது பெண் அவர். இவரின் கணவர் கட்டட வேலைச் செய்துவருகிறார்.இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில், மூன்றுப் பேருக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு மகள் மட்ட... மேலும் பார்க்க

குஜராத்: போலி மருத்துவ மாஃபியா; 10-ம் வகுப்பு படித்துவிட்டு மக்களுக்குச் சிகிச்சை.. சிக்கிய கும்பல்!

குஜராத் மாநிலம், சூரத்தில் தகுந்த கல்வித்தகுதி இல்லாமல் மருத்துவம் பார்த்துவந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சூரத் நகரில் போலி டாக்டர்களை கட்டுப்படுத்த எடுக்கப்படும் த... மேலும் பார்க்க