நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
கறம்பக்குடி அருகே குரங்கு கடித்து குழந்தை காயம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை குரங்கு கடித்து 6 மாதக் குழந்தை காயமடைந்தது.
கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தான்விடுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை தனது 6 மாதக் குழந்தை அனன்யாவை வீட்டின் முன் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலைகளைச் செய்தபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று குழந்தையை கடித்தது.
இதில் தலைப்பகுதியில் காயம் அடைந்த குழந்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.