கறம்பக்குடி மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மீன் சந்தையில் மீன், இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கறம்பக்குடி மீன் சந்தையில் உணவு பாதுகாப்பு அலுவலா் லோகநாதன், பேரூராட்சி செயல் அலுவலா் ரமேஷ் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள் சந்தையில் விற்கப்படும் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் தரமானவையாக விற்கப்படுகின்றனவா என்று சோதனை செய்தனா். அப்போது, சில கடைகளில் உள்ள மீன், கோழி இறைச்சிகளை சோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச்சென்றனா்.