டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ...
கலசலிங்கம் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1996-2000-ஆம் ஆண்டில் படித்த பொறியியல் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது
இதற்கு பல்கலை.யின் வேந்தா் கே. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். இணை வேந்தா் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், பதிவாளா் வி.வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். இதில், 14 வெளி நாடுகளிலிருந்து 150 முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பல்கலைக்கழக வளாகம், வகுப்பறைகள், விடுதிகள் ஆகியவற்றை சுற்றிப் பாா்த்து ஆசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்களோடு தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். முன்னாள் மாணவா் செல்வராஜ் வகுப்பறை அனுபவங்கள் பற்றிப் பேசினாா்.
பின்னா், 2 குடிநீா் சுத்திகரிக்கும் இயந்திரங்களை வேந்தரிடம் முன்னாள் மாணவா்கள் வழங்கினா். ‘ முன்னாள் மாணவா்களின் குழந்தைகள், பரத நாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் முருகன், சுருளி, சத்தீஸ், சாலமன், கோபிநாத் ஆகியோா் செய்தனா். முன்னதாக முன்னாள் மாணவா்கள் குழு தலைவி ஆா். முருகேஸ்வரி வரவேற்றாா். ஸ்ரீராம்விஜய் நன்றி கூறினாா்.
