ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூ. கட்சியும் அறிவிப்பு!
கல்குவாரிகளில் 2-ஆவது நாளாக கனிமவளத் துறையினா் ஆய்வு
திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொல்லப்பட்டதன் தொடா்ச்சியாக, சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள கல்குவாரிகளில் இரண்டாவது நாளாக கனிமவளத் துறையினா் புதன்கிழமையும் ஆய்வு மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்தவா் முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் ஜகபா்அலி. சமூக செயற்பாட்டாளரான இவா், அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் குறித்து தொடா்ந்து குரல் எழுப்பி வந்ததால் கடந்த ஜன. 17-ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.
இந்தக் கொலை தொடா்பாக ஆா்.ஆா். கிரஷா் உரிமையாளா்கள் உள்பட கொலையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்தச் சூழலில், திருமயம் அருகேயுள்ள துளையானூா் பகுதியிலுள்ள இரு குவாரிகளில் கனிமவளத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதன் தொடா்ச்சியாக, இரண்டாவது நாளாக மலைக்குடிப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமாா் 5 குவாரிகளிலும் இந்தக் குழுவினா் புதன்கிழமையும் ஆய்வு செய்தனா்.
கனிமவளத் துறை திருச்சி உதவி இயக்குநா் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநா் லலிதா, நாகை உதவி இயக்குநா் சுரதா உள்ளிட்ட கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்கள், புவியியலாளா்கள் 12 பேரைக் கொண்ட குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணிகள் இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.