கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
2025 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா நினைவாக, அவரது துணிச்சல் மற்றும் முயற்சியை பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வீரதீர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட வீரதீர செயல்புரிந்த மகளிா் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படுவா். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவின் மூலம் சரிபாா்க்கப்பட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே சமூகநல ஆணையரகத்திற்கு பரிந்துரைக்கப்படும். மேலும், இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படும் மகளிருக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கமும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புபவா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.