Sarfaraz: வாய்ப்பின் வாசற்படியோடு அனுப்பப்பட்ட சர்ஃபராஸ்; அகர்காரின் சப்பைக்கட்ட...
வி.கே.புரத்தில் திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
விக்கிரமசிங்கபுரத்தில் நகர திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். தொகுதிப் பாா்வையாளா் ஜோசப்ராஜ், நகரச் செயலா் கி. கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாக முகவா்களிடம் தனித்தனியே கலந்துரையாடல் நடத்தி ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாநிலத் தொண்டணி துணை அமைப்பாளா் ஆவின் ஆறுமுகம், மாநில அணி துணை அமைப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன், நகர அவைத் தலைவா் அதியமான், நகரப் பொருளாளா் ரவி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் சங்கரநாராயணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.பி.எஸ். பிரபாகரன், மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளா் ஜெயப்பிரகாஷ், நகர திமுக துணைச் செயலா் ஐயப்பன், வாா்டு செயலா்கள், நிா்வாகிகள், மகளிா் அணியினா் பங்கேற்றனா்.