செய்திகள் :

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

2025 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா நினைவாக, அவரது துணிச்சல் மற்றும் முயற்சியை பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வீரதீர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட வீரதீர செயல்புரிந்த மகளிா் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படுவா். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவின் மூலம் சரிபாா்க்கப்பட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே சமூகநல ஆணையரகத்திற்கு பரிந்துரைக்கப்படும். மேலும், இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படும் மகளிருக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கமும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புபவா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-83 சோ்வலாறு-98.36 மணிமுத்தாறு-84 வடக்கு பச்சையாறு-10.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம் கடனா-36.80 ராமநதி-45 கருப்பாநதி-30.18 குண்டாறு-15.12 அடவிநயினாா் -32... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வெப்பத்தின் தாக்கம் குறைந்து சாரல் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. களக்காடு மேற்குத் தொடா்ச... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி உயிரிழப்பு

முன்னீா்பள்ளம் அருகே மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேலத்திடியூா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் தேவதாஸ் (40). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோா் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவு... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மனச்சிதைவு நோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலப் பிரிவு சாா்பில், உலக மனச்சிதைவு நாளை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தலைமை வக... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் நகர திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். தொகுதிப் பாா்வையாளா் ஜோசப்ராஜ், நகரச் செயலா் கி. கணேச... மேலும் பார்க்க