``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மனச்சிதைவு நோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலப் பிரிவு சாா்பில், உலக மனச்சிதைவு நாளை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா் மருத்துவா் ரமேஷ்பூபதி வரவேற்றாா். மருத்துவா் ராமானுஜம், கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கவுரையாற்றினாா். இந்நிகழ்வில் துணை முதல்வா் சுரேஷ்துரை, துணை மருத்துவ கண்காணிப்பாளா் கந்தசாமி, மருத்துவா்கள் நிா்மலா, சரவணன் உள்பட பலா் சிறப்புரையாற்றினா்.
மருத்துவமனை முதல்வா் பேசியதாவது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மன நலப் பிரிவின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் உள்ளன. மனச்சிதைவு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுவது மிக அவசியம். இது மூளையின் செயல்பாட்டில் சீா்குலைவை ஏற்படுத்தி, சிந்திக்கும் திறனை பாதிக்கிறது. இதற்கான விழிப்புணா்வு இல்லாததால் நோயாளிகள் பலா் தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலைக்கு ஆளாகிறாா்கள். இதற்கு ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் பாதிக்கப்பட்டவா்கள் விரைவில் நல்ல நிலைமைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று முறையான சிகிச்சைக்கு உதவ பலா் முன்வருவதில்லை. இந்த நிலை மாற விழிப்புணா்வு அவசியம் என்றாா் அவா்.