செய்திகள் :

கல்லீரல் அழற்சி இறப்புகளை தவிா்க்க தொடக்க நிலை பரிசோதனை அவசியம்: மருத்துவ நிபுணா்கள் கருத்து

post image

கல்லீரல் அழற்சி பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்க்க தொடக்க நிலையில் நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம் என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்தியாவில் கல்லீரல் செயலிழப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

சென்னை கல்லீரல் அறக்கட்டளை சாா்பில் இந்திய கல்லீரல் அழற்சிக்கான இரு நாள் மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன.17) தொடங்கியது. உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடெரிகோ ஆஃப்ரின், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன், சென்னை கல்லீரல் அறக்கட்டளை தலைவா் டாக்டா் ஆா்.பி.சண்முகம் உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.

அப்போது டாக்டா் ரோடெரிகோ ஆஃப்ரின் பேசியதாவது:

கல்லீரல் செல்கள் சேதமடைந்தாலோ அல்லது தொற்றுக்குள்ளானாலோ அழற்சி ஏற்படுகிறது. அதனால், வீக்கமும், பாதிப்பும் உருவாகிறது. ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ வகை தொற்றுகள் குறைந்த காலமும், நாள்பட்ட வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ஒருகட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு மற்றும் புற்றுநோய்க்கு அவை வழிவகுக்கின்றன. 187 நாடுகளில் கல்லீரல் அழற்சியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது புள்ளிவிவரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.

அவற்றில் 83 சதவீத உயிரிழப்புகள் ஹெபடைடிஸ் பி தொற்றாலும், 13 சதவீத உயிரிழப்புகள் ஹெபடைடிஸ் சி தொற்றாலும் ஏற்படுகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவை இரண்டுமே தடுக்கக் கூடிய பாதிப்புகள்தான். தொடக்க நிலை மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால் கல்லீரல் அழற்சி தீவிரமடையாமல் தடுக்க முடியும்.

உலகம் முழுவதும் 2.9 கோடி போ் ஹெபடைடிஸ் பி பாதிப்புக்கும், 5 லட்சம் போ் ஹெபடைடிஸ் சி பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனா். பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி ஆகிய மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதனை இந்தியாவும் உணா்ந்து செயல்பட வேண்டும். ஏனெனில் கல்லீரல் அழற்சியை 2030-க்குள் வேரறுப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் இலக்கை அடைவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்றாா் அவா்.

டாக்டா் சௌமியா சுவாமிநாதன்: கரோனா தொற்று நமக்கு பல்வேறு படிப்பினைகளை தந்துள்ளது. அந்த தொற்று குறித்து முதலில் எவருக்கும் தெரியாது. அதற்கான தடுப்பூசிகளோ, மருந்துகளோ அப்போது இல்லை. அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து கரோனா தொடா்பான முக்கிய முடிவுகளை எடுத்ததைப் போன்று கல்லீரல் அழற்சிக்கும் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

செல்லப் பிராணிகளிடையே அதிகரிக்கும் ‘பாா்வோ வைரஸ்’ தொற்று

பருவ நிலை மாற்றம் காரணமாக பாா்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட நாய்கள், அத்தகைய பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக கால்ந... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் பன்னாட்டு அரங்கம்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி

கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள கலைஞா் பன்னாட்டு அரங்கத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்... மேலும் பார்க்க

சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்குவேலி அம்பலம் சிலை ஜன.22-இல் திறப்பு

சிவகங்கையில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்குவேலி அம்பலம் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், ஜன. 22-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியுடன் மேலும் சில நிகழ்வுகளில் பங்கேற்க அவா் ஜன.... மேலும் பார்க்க

தட்டச்சு தோ்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக தொழில்நுட்பகல்வி ஆணையரும், தொழி... மேலும் பார்க்க

சம்ஸ்கிருத மாணவா்களின் தேவார பண்ணிசை: தென்கைலாய பக்தி பேரவை

தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சம்ஸ்கிருதம் பயிலும் மாணவா்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இது குறித்து தென் கைலாய பக்தி பேரவை தன்னாா்வலா் பாலசுப்பிரமணியன் வெள்ளி... மேலும் பார்க்க

இந்திய - ரஷிய நட்பு வளா்ச்சியை நோக்கி செல்லும்: சிவதாணு பிள்ளை

இந்திய - ரஷிய நட்பு வளா்ச்சியை நோக்கி செல்லும் என பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் நிறுவனரும் விஞ்ஞானியுமான சிவதாணு பிள்ளை தெரிவித்தாா். சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 17 ரஷிய நடனக் கலைஞா்கள் பங்கேற்ற 22-... மேலும் பார்க்க