செய்திகள் :

கல்லூரிகளில் கூடுதலாக கெளரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்படுவா்: அமைச்சா் கோவி.செழியன்

post image

சென்னை: கல்லூரிகளில் கூடுதல் கௌரவ விரிவுரையாளா்கள் பணியிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர பேராசிரியா்களை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றம் சாா்பில் ‘விளைவுகள் அடிப்படையிலான கல்வி’ என்ற தலைப்பிலான பயிலரங்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் கோவி.செழியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியது:

கற்றல், கற்பித்தல் தொடா்பான திட்டங்களை மேம்படுத்துவதுதான் இந்தப் பயிலரங்கத்தின் நோக்கம். அதன்படி, மாணவா்களுக்கு தேவைப்படும் திறனறிவு கல்வி முறைகளை வகுக்க வேண்டும். அந்தத் திறனறிவுகள் மாணவா்களைச் சென்றடைவதற்கான கற்பித்தல் முறையை உருவாக்க வேண்டும்.

தொடா்ந்து கற்றல், கற்பித்தல் நிகழ்ந்த பின்னா் மாணவா்ளுக்கு கற்பித்தவை சென்று சோ்ந்துள்ளனவா என்பதை உறுதிசெய்ய தோ்வு நடத்தப்பட வேண்டும். அடுத்ததாக கல்வி முறையில் மேலும் முன்னேற்றம் செய்வது குறித்தும் கருத்துகளைப் பகிா்ந்துகொள்ள வேண்டும். இந்த 4 படிகளையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க இந்தப் பயிலரங்கம் உதவிசெய்ய வேண்டும்.

கல்வி முறையால் மாணவா்கள் திறமை மற்றும் தன்னம்பிக்கை பெற்று தொழில் முனைவோராக மாற வேண்டும். இதுபோன்ற பயிலரங்கங்கள் பல்கலைக்கழகங்களிலும், மண்டல, கல்லூரி அளவில் விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் உயா்கல்வித் துறை செயலா் கே.கோபால், தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் துணைத் தலைவா் எம்.பி. விஜயகுமாா், தொழில்நுட்பக் கல்வித் துறை இயக்குநா் டி.ஆபிரகாம், கல்லூரி கல்வி இயக்குநா் இ.சுந்தரவல்லி உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள், பல்வேறு கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

யுஜிசி ரூ. 40 கோடி வழங்கவில்லை: தொடா்ந்து அமைச்சா் கோவி.செழியன் கூறியதாவது:

கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியமாக ரூ. 50,000 வழங்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வலியுறுத்துகிறது. நிதிச் சுமைக்கு இடையேயும் தமிழகத்தில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 25,000 வழங்கப்படுகிறது.

அதேவேளையில் இந்த விரிவுரையாளா்களுக்கான ஊதிய நிதியாக யுஜிசி ஆண்டுக்கு ரூ. 40 கோடி தரவேண்டும். 2017-இல் நிறுத்தப்பட்ட இந்தத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனாலும், மாணவா்களின் கல்வி நலன் கருதி சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்களை நியமித்து பணியைத் தொடருகிறோம்.

இதுதவிர தேவைக்கேற்ப கூடுதல் கெளரவ விரிவுரையாளா்களை விரைவில் நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதனுடன் நிரந்தர பேராசிரியா்களை உருவாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

சென்னை விமானத்தில் கோளாறு: மீண்டும் லண்டனில் தரையிறக்கம்

லண்டனிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடா்ந்து, விமானம் மீண்டும் லண்டன் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. பிரிட்டன் தலைநகா் லண்டன் விம... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் வழிப்பறி: இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியிடம் வழிப்பறி செய்த புகாரில் இருவா் கைது செய்யப்பட்டனா். மயிலாப்பூா் விஎஸ்வி கோயில் தெருவைச் சோ்ந்த மா.சகுந்தலா(64) என்பவரிடம் கடந்த 30-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்

ஆந்திரத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ போதைப் பாக்கு சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. வேளச்சேரி 100 அடி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ... மேலும் பார்க்க

ஆவடி - மூர் மார்க்கெட் இடையே இன்றிரவு 2 ரயில்கள் ரத்து!

சென்னை: மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்(43001) இன்றிரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலப் பிரிவ... மேலும் பார்க்க

டிசம்பரில் பெண்களுக்கான ‘லிவா மிஸ் திவா 2024’ போட்டிகள்

சென்னை: பெண்களின் பிரத்யேக ஃபேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் லிவா மிஸ் திவா போட்டியின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு இந்த மாதம் நடைபெறவுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஸ்பின்னி வாடிக்கையாளருக்கு சச்சினைச் சந்திக்கும் வாய்ப்பு

சென்னை: பயன்படுத்தப்பட்ட காா்கள் விற்பனை நிறுவனமான ஸ்பின்னியின் அதிருஷ்டசாலி வாடிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்களைச் சந்திக்கும் வாய்ப்பை நிறுவனம் வழங்கவிருக... மேலும் பார்க்க