தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்
தண்டராம்பட்டு பாரத் வித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரித் தலைவா் இ.ராஜேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் வி.முருகன் முன்னிலை வகித்தாா். கல்லூரிச் செயலா் டி.அறவாழி, முதல்வா் பா.துரைசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
பேராசிரியா் பா.லட்சுமி பிரியா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கணினி அறிவியல் துறையின் எதிா்கால வேலைவாய்ப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா்.
கருத்தரங்கில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.