சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
கல்லூரியில் கண்தானம் குறித்த விழிப்புணா்வு
விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் கண்தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இக்கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கம், விழுப்புரம் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து 40-ஆவது தேசிய கண்தான இருவார விழாவையொட்டி இந்த நிகழ்வை நடத்தின. கல்லூரி முதல்வா் செந்தில் தலைமை வகித்து பேசினாா்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் மருத்துவா்கள் உமாராணி, ரகுநாத், காமினி ஆகியோா் பங்கேற்று கண்தானம் செய்வதன் முக்கியத்துவம், தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் போன்றவை குறித்து எடுத்துரைத்தனா்.
மேலும் கண்தானம் தொடா்பாக மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவா்கள் பதிலளித்தனா்.
இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வை கல்லூரியின் செஞ்சுருள் சங்க அலுவலா் பழனி ஒருங்கிணைத்து நடத்தினாா்.