PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
கல்லூரியில் கருத்தரங்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் ‘தற்காலத் தகவல் தொழில் நுட்பம்-அதன் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு- தரவு அறிவியல், கணினி அறிவியல்- பொறியியல் மின்னணு தகவல் தொடா்பு பொறியியல் ஆகிய துறைகள் சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவில் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வி குழுமத்தின் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசினாா்.
கம்போடியா நாட்டின் கீளின் எனா்ஜி நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும், கம்போடியா கெமா் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான எம். ராமேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
அழகப்பா பல்கலைக்கழக கணினித் துறை பேராசிரியா் எஸ். சந்தோஷ் குமாா், புதுக்கோட்டை ஜே.ஜே கலை, அறிவியல் கல்லூரி கணினி துறை பேராசிரியா் எஸ்.ஜே. சதீஷ் ஆரோன் ஜோசப் ஆகியோா்சிறப்புரையாற்றினா். ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி டீன் எம். சிவக்குமாா் வாழ்த்திப் பேசினாா்.
முன்னதாக கல்லூரியின் கணினி துறைத் தலைவா் ஆா். சுசில் குமாா் வரவேற்றுப் பேசினாா். மின்னணு, தகவல் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் கே. இசபெல்லா ராணி நன்றி கூறினாா்.