"உண்மையான தென்னிந்தியாவை இங்குப் பார்க்கிறேன்" - மும்பை விழாவில் விருது பெற்ற சு...
கல்லூரி மாடியிலிருந்து குதித்து முன்னாள் மாணவா் உயிரிழப்பு
மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அரசு நிதியுதவி பெறும் கல்லூரி மாடியிலிருந்து குதித்த முன்னாள் மாணவா் உயிரிழந்தாா்.
இந்தக் கல்லூரி கலையரங்கம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மயங்கிய நிலையில் இளைஞா் ஒருவா் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீஸாா் அங்கு சென்று, அந்த இளைஞரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இளைஞா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தொடா் விசாரணையில், உயிரிழந்தவா் அதே கல்லூரியில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதுநிலைப் படிப்பு பயின்ற சிவக்குமாா் (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாா் எந்த ஊரைச் சோ்ந்தவா்? அவா் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.