சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!
எம்புரான் படத்திலிருந்து விலகிய லைகா?
நடிகர் மோகன்லாலின் எம்புரான் திரைப்படத்திலிருந்து லைகா விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முன்னதாக, இப்படம் மார்ச் 27 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், படத்தின் இணை தயாரிப்பாளரான லைகா நிறுவனம் கடந்த சில நாள்களாக ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திடம் பெரிய தொகை கேட்டு அழுத்தம் கொடுத்ததாகவும் இதனால் இப்படம் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

தற்போது, மார்ச் 27 அன்று காலை 6 மணிக்கு எம்புரானின் முதல் காட்சி துவங்கும் என போஸ்டர் வெளியிட்டு மோகன்லால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாராட்டுகளைப் பெறும் பொன்மேன்!
ஆனால், அப்போஸ்டரில் லைகா குறித்த எந்தத் தகவல்களும், டேக்(tag)-ம் செய்யப்படவில்லை. இதனால், படத்தின் முழு உரிமத்தையும் ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கலாம் எனத் தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வெற்றி பெற்ற லைகாவுக்கு லால் சலாம், சந்திரமுகி - 2, இந்தியன் - 2 ஆகிய படங்கள் தோல்வியைக் கொடுத்ததால் தயாரிப்பு ரீதியாக சிக்கல்களில் இருக்கின்றனராம்.
அதன் காரணமாகவே, எம்புரான் படத்தின் வெளியீட்டிற்கு முன் ரூ. 60 கோடி வரை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திடம் லைகா கேட்டதாகக் கூறப்படுகிறது.