செய்திகள் :

முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது: நிதின் கட்கரி

post image

முஸ்லிம் சமூகத்தினருக்கு கல்விக்கான அவசரத் தேவை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

நாக்பூரில் நேற்று (மார்ச். 15) நடைபெற்ற மத்திய இந்தியா கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.

அங்கு பேசிய அவர், “நமது சமூகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக தேநீர் கடைகள், பான் மசாலா கடைகள், பழைய பொருள்கள் வியாபாரம், லாரி ஓட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற ஒரு சில தொழில்கள் மட்டுமே முஸ்லிம் சமூகத்திற்குள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொறியாளர்கள், மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறினால் சமூகம் வளர்ச்சியடையும்.

இதையும் படிக்க | சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி தொடக்கம்

அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானி. அவரது சாதனைகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அவரை அறியச் செய்தன. அவரை நாம் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.

நாம் மசூதியில் நூறு முறை பிரார்த்தனை செய்யலாம். ஆனால் அறிவியல், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நமது எதிர்காலம் என்னவாகும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “எந்தவொரு நபரும் சாதி, பிரிவு, மதம், மொழி, பாலினத்தால் உயர்ந்தவராக மாறுவதில்லை. நல்ல குணங்களால் மட்டுமே ஒருவர் உயர்ந்தவராகிறார் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் எதன் அடிப்படையிலும் நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம்.

நான் அரசியலில் இருக்கிறேன், சாதித் தலைவர்கள் அடிக்கடி என்னைச் சந்திக்க வருவார்கள். ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு வாக்குகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், நான் என் சொந்தக் கொள்கையின்படி வாழ்வேன்.

இதையும் படிக்க | இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

ஒருமுறை 50,000 பேர் கொண்ட கூட்டத்தில் சாதியைப் பற்றிப் பேசுபவர்களை நான் உதைப்பேன் என்று பேசியிருக்கிறேன்.

கல்வி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மட்டும் பயனளிக்காது. அது சமூகத்தையும் தேசத்தையும் வளர்க்கும். அறிவே சக்தி. அதனை உள்வாங்குவதே உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்த... மேலும் பார்க்க

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது. கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக... மேலும் பார்க்க

மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது

மீரட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி வளாகத்தில் தொழுகை நடத்தியதாக மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் ஹோலி கொண்டாட்டங்களையொட்டி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில... மேலும் பார்க்க

லல்லு பிரசாத்தின் மகனுக்கு ரூ.4,000 அபராதம் விதிப்பு

லல்லு பிரசாத் யாதவின் மகனுக்கு பிகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது. லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை பாட்னாவில் உள... மேலும் பார்க்க

ரூ. 375 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டுப் பெண்கள் கைது!

கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில், இரு பெண்களைக் கைது செய்த மங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தில... மேலும் பார்க்க

ஆந்திரம்: மதுபோதையில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு!

ஆந்திரத்தில் மதுபோதையில் அரசுப் பேருந்திற்கு கீழ் உள்ள ஸ்டெப்னி டயரில் பயணி ஒருவர் தொங்கியபடி பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து சத்ய சாய் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க