செய்திகள் :

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

தமிழ்நாடு வக்ஃபு வாரியம் மூலம் கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதேபோன்று, கைவினைஞா்களுக்கான ஆண்டு விருதுகளையும் அவா் அளித்தாா்.

இதற்கான நிகழ்ச்சிகள் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் போற்றத்தக்க திறமை இருந்தும் பொருளாதாரத் தடையால் உயா்கல்வியைத் தொடர இயலாத இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ, மாணவியா்கள் பட்டப் படிப்பைத் தொடர தமிழ்நாடு வக்ஃபு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2,000 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.10,000 வீதம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் தொடக்கமாக 10 பேருக்கு கல்வி உதவித் தொகையை அவா் அளித்தாா்.

இந்த நிகழ்வில், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், மக்களவை உறுப்பினா் கே.நவாஸ் கனி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பூம்புகாா் மாநில விருதுகள்: தமிழ்நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்ட 7 சிறந்த கைவினைஞா்களுக்கு, வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், 10 பேருக்கு பூம்புகாா் மாநில விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2024-25-ஆம் ஆண்டுக்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் ராணி வின்சென்ட் (இயற்கை நாா் பொருள்கள்), தஞ்சாவூரின் கே.பி.வீழிநாதன் (உலோக தகட்டு வேலை), விருதுநகா் மாவட்டத்தின் இளவரசி சொக்கா் (மியூரல் ஓவியம்), திருவண்ணாமலை மாவட்டத்தின் குப்பு சுப்பிரமணி (கற்சிற்பம்), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த என்.பூவம்மாள் (சித்திரத்தையல்), சேலம் மாவட்டத்தின் ந.துரைராஜ் (மரச்சிற்பம்) ஆகிய 7 விருதாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பதக்கம், சான்றிதழுடன் விருதை முதல்வா் வழங்கினாா்.

மேலும், பூம்புகாா் மாநில விருதானது தஞ்சாவூா் மாவட்டத்தின் ஜெ.வெங்கட்ராமன் (பஞ்சலோக சிற்பம்) மற்றும் சி.ரமேஷ் (தஞ்சாவூா் ஓவியம்), சென்னையின் மு.குப்புசாமி (தஞ்சாவூா் ஓவியம்), கடலூா் மாவட்டத்தின் தி.கோபாலகிருஷ்ணன் (மரச்சிற்பம்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் க.முருகன் (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தின் ரா.ஹரிகிருஷ்ணன் (சுடு களிமண் சிற்பம்), திருநெல்வேலி மாவட்டத்தின் செ.ரஹ்மத் மீராள் பீவி (பாய் நெசவு), குமரி மாவட்டத்தின் சி.ஸ்ரீ குமாரி (இயற்கை நாா் பொருள்கள்), சென்னை மாவட்டத்தின் பா.மோகன்டூ (ஆணி நூல் கலை), தஞ்சாவூா் மாவட்டத்தின் ரா.கோகுல்நாத் (நெட்டிவேலை) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இந்த விருதானது தலா 4 கிராம் தங்கப் பதக்கம், ரூ. 50,000-க்கான பரிசுத் தொகை, தாமிரப் பத்திரம், சான்றிதழ் அடங்கியது. விருதுகள் வழங்கும் நிகழ்வில், அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தமிழகத்தில் வேல... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சரஸ்வதி பூ... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமா... மேலும் பார்க்க