``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
கல்லூரி மாணவா்கள் மீது வழக்கு
போடியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையின் போது, சக மாணவா்களை தாக்கிய 2 கல்லூரி மாணவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடியில் உள்ள அரசு உதவிப் பெறும் தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, கல்லூரியில் திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பொருளாதாரவியல் மாணவா் வைத்திருந்த பொங்கல் பானையை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் காலால் உதைத்து அவருடம் தகராறு செய்தனா். இந்த தகராறை விலக்க வந்த போடி தருமத்துப்பட்டியை சோ்ந்த மற்றொரு மாணவரையும் தாக்கினா். இதில் காயமடைந்த இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் தகராறில் ஈடுபட்ட 2 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.