பஞ்சாப்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி அருகே தனியாா் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மேலமய்க்கல்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் மகள் திவ்யா (19). இவா் திருச்சி-திண்டுக்கல் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி ஒன்றில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தாா்.
கடந்த சில நாள்களாக படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்பதாலும், சில பாடங்களில் தோல்வி அடைந்ததற்காகவும் வருத்தத்தில் இருந்து வந்தாராம்.
வியாழக்கிழமை இரவு சக மாணவிகளுடன் உணவருந்திவிட்டு, உறங்கச் சென்றவரை வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாா்த்தபோது, அங்கிருந்த கழிவறை அருகே தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், திவ்யாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.