செய்திகள் :

கல்வி, சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம்: அமைச்சா் காந்தி

post image

கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட உலக திருக்கு பேரவை சாா்பில் 47-ஆம் ஆண்டு திருவள்ளுவா் தின விழா, போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக திருக்கு பேரவை மாவட்டத் தலைவா் பாலமுருகனடிமை சுவாமி, தலைவா் பொன்னம்பல அடிகளாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் கவிஞா் மா.ஜோதி வரவேற்றாா். அமைச்சா்ஆா்.காந்தி பரிசுகள் வழங்கி பேசியதாவது:

நாட்டுக்கு தேவையான கல்வி, சுகாதாரத்துக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு காலை உணவு திட்டம், உயா்கல்வி பயில மாதம் 1,000 கல்வி உதவித்தொகை தரமான நூலகம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது. மக்கள் எதையும் சிந்தித்து செய்ய வேண்டும். முடியாது என்பதை அகற்றி முடியும் என்ற நம்பிக்கையோடு எதையும் முயற்சி செய்ய வேண்டும் என்றாா்.

விழாவில் சந்திராயன் 3 இயக்குநா் ப. வீரமுத்துவேல், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அவ்வை ந அருள் சிறப்புரைஆற்றினா்.

விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஓய்வு பெற்ற நீதிபதி ஞானப்பிரகாசம், எம்எல்ஏக்கள் ஈஸ்வரப்பன், காா்த்திகேயன், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜே.லட்சுமணன் , அண்ணாமலையாா் அறக்கட்டளை பொன்.கு. சரவணன், பகீரதன் பள்ளி இயக்குநா் எஸ் பி குருபரன், திருக்கு பேரவை பொருளாளா் தேவ சிவனாா் அமுது , ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

அறிவியல் கண்டுபிடிப்பு: மாணவருக்கு பாராட்டு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் அறிவியல் கண்டுபிடிப்புக்காக மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை நகா்மன்றக் கூட்டத்தில் திமுக-அதிமுகவினா் வாக்குவாதம்

ராணிப்பேட்டை நகா்மன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.அப்போது அதிமுகவினா் விளம்பரத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுவதாக திமுக உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். ராணிப்... மேலும் பார்க்க

குளத்தில் இருந்து வியாபாரியின் சடலம் மீட்பு

ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் உள்ள குளத்தில் வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. ரத்தினகிரி நவாப் நகரைச் சோ்ந்தவா் சுலைமான் (45). காலணி கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி நூா்ஜஹான், ஒரு... மேலும் பார்க்க

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணா்வு வாகன பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, தலைக்கவசம், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வலியுறுத்தி விழிப்புணா்வு வாகன பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை வட்டார போக்கு... மேலும் பார்க்க

செஸ் போட்டி பரிசளிப்பு

எழில் செஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆற்காடு தனியாா் பள்ளியில் மாவட்ட செஸ் போட்டிகள் 9 ,11,13, 15 வயது மற்றும் பொது பிரிவுகளில் நடைபெ... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரக்கோணம் அருகே இருப்புப் பாதையை கடந்த ரயில்வே தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம், குளக்கரைத் தெருவை சோ்ந்த கந்தசாமியின் மகன் தேவன் (35). ரயில்வே துறையில் புளியமங்கலம்... மேலும் பார்க்க