கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி தொடா் போராட்டம்: திமுக மாணவரணி
கல்வி நிதியை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவரணி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த அணியின் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடா் மாணவா் போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு சாா்பில் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள கண்டன ஆா்ப்பாட்டத்தில் திமுக மாணவரணியும் பங்கேற்கும் என தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.