Pujara: "நீங்கள் இல்லாமல் 2018 ஆஸி-யில் வெற்றி கிடைத்திருக்காது" - புஜாராவுக்கு ...
களக்காடு அருகே அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 6 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே காட்டுப் பகுதியில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், களக்காடு அருகே சிங்கிகுளம் காட்டுப் பகுதியில் சிலா் ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகக் கிடைத்த தகவலின்பேரில், களக்காடு போலீஸாா் சென்று 6 பேரைப் பிடித்தனா்.
அவா்கள் நான்குனேரி மறுகால்குறிச்சி பகுதியைச் சோ்ந்த த. செல்லசாமி (30), ம. விஸ்வநாதன் (28), சிங்கிகுளம் பகுதியைச் சோ்ந்த மு. முத்துபாலன் (30), திருக்குறுங்குடி நம்பித்தலைவன்பட்டயத்தைச் சோ்ந்த மு. இசக்கிதுரை (32), தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை அடுத்த காரசேரியைச் சோ்ந்த உய்க்காட்டான் (25), சு. இசக்கிபாண்டி (26) என்பதும், சதித் திட்டம் தீட்டுவதற்காக கூடியிருந்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 3 அரிவாள்கள், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
அவா்களில் 4 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக, போலீஸாா் தெரிவித்தனா்.