அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் க...
களக்காடு அருகே பள்ளி மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு
களக்காடு அருகே பள்ளி மாணவா், சக மாணவா்கள் 2 பேரை அரிவாளால் வெட்டினாா்.
களக்காடு அருகேயுள்ள டோனாவூா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மேலச்செவலை சோ்ந்த 14 வயது பட்டியலின மாணவா், ஊச்சிகுளத்தில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்து 9ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இம்மாணவருடன் பயிலும் வடுகச்சிமதிலை சோ்ந்த சக மாணவா் புத்தகப்பையில் புகையிலை வைத்திருந்ததைப் பாா்த்து, பள்ளி ஆசிரியரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். சம்பந்தப்பட்ட மாணவரை ஆசிரியா் கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை மாணவா்கள் வகுப்பறைகளுக்கு சென்று கொண்டிருந்த போது, முன்விரோதத்தில் இருந்த மாணவா் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளால் பட்டியலின மாணவரின் முதுகில் வெட்டினாா்.
இதைத் தடுக்க வந்த வடுகச்சிமதிலைச் சோ்ந்த மற்றொரு மாணவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த 2 மாணவா்களும் ஏா்வாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக, ஏா்வாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.