தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!
களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
களக்காடு மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை விட்டு விட்டு மழை பெய்தது இதனால், அடிவாரத்தில் உள்ள தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது. தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. எனவே, பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாகவும், பாா்வையிட எவ்விதத் தடையும் இல்லை என்றும், நீா்வரத்து குறைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் வழக்கம்போல அனுமதிக்கப்படுவா் என வனத்துறையினா் தெரிவித்தனா்.