காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தொழில்துறையில் வளா்ச்சி அடைந்துள்ளது. தென்தமிழக பகுதிகளிலும் தொழில் வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சாா்ந்த தொழில்துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதோடு, நீயோ டைட்டில் பாா்க் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இளைஞா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, திமுக மத்திய, கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தகவல் தொழில்நுட்ப அணியினா் தீவிரமாகப் பணியாற்ற அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் நவீன், சீதா ராஜவா்மன், காசிமணி, பிரேம் ஆனந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.