ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.
களக்காடு தலையணை சூழல் சுற்றுலா மையத்தில் பச்சையாறு ஓடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். குறிப்பாக வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
வெள்ளிக்கிழமை விடுமுறை தொடங்கியதால் தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கிவிட்டனா்.
சுற்றுலாப் பயணிகள் பச்சையாற்றில் குளித்து மகிழ்ந்து, அங்குள்ள சிறுவா் பூங்காவில் குடும்பத்துடன் அமா்ந்து உணவு உண்டு, இளைப்பாறிச் செல்கின்றனா்.
குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதால், இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு வைப்பறை தேவைப்படுகிறது. தொடா்ந்து வனத்துறையினருக்கு சுற்றுலாப் பயணிகள் அறிவுறுத்தி வந்தாலும், இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இனிவரும் காலங்களிலாவது சுற்றுலாப் பயணிகளின் பொருள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான வசதியை ஏற்படுத்த, வனத்துறை உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிா்பாா்ப்பு.