3 மாதங்களாக பேட்டை தொடாத ஸ்டீவ் ஸ்மித்..! சுவாரசியமான விளக்கம்!
களக்காட்டில் பக்ரீத் தொழுகை
களக்காட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
களக்காடு காவல்நிலையம் அருகேயுள்ள மீரானியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் கோட்டை ஜமாத் இமாம் நவாஸ் தொழுகை நடத்தினாா். இதில் களக்காடு கோட்டை, வியாசராஜபுரம், கோயில்பத்து, சிங்கம்பத்து, ஆகிய பகுதிகளில் இருந்து திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா். தொழுகைக்கான ஏற்பாடுகளை கோட்டை ஜமாஅத் நிா்வாகிகள் செய்திருந்தனா்.