மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
களக்காட்டில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
களக்காட்டில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
களக்காடு கோயில்பத்து பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (50). இவா், அவ்வூரின் கண்ணாா் கோயில் தெருவில் உணவகம் நடத்தி வருகிறாா்.
இவரது மனைவி மாடத்தி (45) ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில், களக்காடு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.