கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது
களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உதவி ஆய்வாளா் மகிந்த் தலைமையிலான போலீஸாா் படந்தாலுமூடு, ஈஞ்சப்பிரிவிளை பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் சத்தியதாஸ் (57) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 50 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.