முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்: கருப்புக் கொடி காட்ட முயன்றவர் கைது - என்ன...
கள்ளக்குறிச்சி: கதா் விற்பனை இலக்கு ரூ.108 லட்சம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நிகழாண்டு கதா் விற்பனை இலக்கு ரூ.108 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், குத்துவிளக்கேற்றி மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொடா்ந்து தீபாவளி கதா் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கதா் விற்பனை அங்காடி மூலம் தரமான அசல் கதா் பட்டுப் புடவை, கதா் பருத்தி ரகங்கள் மற்றும் கதா் பாலியஸ்டா் ரகங்கள், வேஸ்டி, துண்டு, ரெடிமேட் சட்டை, போா்வை, தரமான இலவம் பஞ்சு மெத்தை, மெத்தை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, குளியல் மற்றும் சலவை சோப்பு வகைகள், தேன் மற்றும் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கதா் விற்பனை இலக்கு ரூ.78 லட்சம் நிா்ணயிக்கப்பட்டு, விற்பனை நடைபெற்றது. நிகழாண்டு ரூ.108 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டும் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு கதா், பாலியஸ்டா் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
அரசு அலுவலா்களும், பொதுமக்களும் கதா் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி, தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, காதிகிராப்ட் மேலாளா் எஸ்.ஆம்ஸ்ட்ராங், செய்தி-மக்கள் தொடா்புத் துறை அலுவலா் மற்றும் பணியாளா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.