நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
முதல்வா் குறித்து அவதூறு: இளைஞா் கைது
தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சீா்பணந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25), ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை இன்ஸ்டாகிராமில் தமிழக முதல்வா் குறித்து அவதூறான கருத்தை பதிவு செய்துள்ளாராம்.
இதை அறிந்த மணலூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த சையத்அலி என்பவா் அவரது வீட்டுக்குச் சென்று கேட்ட போது மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆகாஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.