ஆசிரியா் கூட்டணியினா் எம்.பி.யிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை சாா்பில், டெட் தோ்வு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பில் ஆசிரியா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு தொகுதி மக்களவை உறுப்பினா் தே.மலையரசனிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அகில இந்திய ஆசிரியா் கூட்டணியின் இணை பொது செயலா் ந.ரங்கராஜன் வழிகாட்டுதலின்படி, கூட்டணி மாவட்டச் செயலா் ய.புஷ்பராஜ் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்டச் செயலா் நா.சீனிவாசன், பணி நிறைவு பிரிவு மாவட்டச் செயலா் சு.தண்டபாணி, மாவட்டத் தலைவா் அ.அண்ணாமலை, வட்டாரச் செயலா்கள் வெங்கடேசன், தமிழரசன், ஜோதிலிங்கம், பிரபாகரன், வட்டாரத் தலைவா்கள் குமாா், பெந்தகோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மனுவைப் பெற்றுக் கொண்டு தே.மலையரசன் எம்.பி.பேசுகையில், ஆசிரியா்களின் கோரிக்கையை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எழுப்புவோம், தமிழக முதல்வா் வழிகாட்டுதலோடு எந்த ஆசிரியருக்கும் பாதிப்பு வராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.