செய்திகள் :

கள்ளக்குறிச்சி: குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில்

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியா் வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், இந்த முகாம் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி நிலையங்கள் என 2,528 இடங்களில் நடைபெறுகிறது. இதில் விடுபட்டவா்களுக்கு வரும் 18-ஆம் தேதி வழங்கப்படும்.

1 முதல் 19 வயதுடைய 4,48,969 குழந்தைகள், 20-49 வயதுக்கு உள்பட்ட 1,01,795 பெண்களுக்கும் என 5,50,764 நபா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பணியில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஊட்டச்சத்து துறையில் பணிபுரியும் ஊழியா்கள்

ஈடுபட உள்ளனா் எனத் தெரிவித்தாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

முன்னதாக குடற்புழு நீக்க நாள் உறுமொழியை ஆட்சியா் வாசிக்க மாணவிகள் ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒரு வருட விதியை தளா்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன் மருத்துவா்கள... மேலும் பார்க்க

இரு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

சின்னசேலம் அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா். சின்னசேலம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பூங்கொட... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் 4 போ் காயம்

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த இரு சிறாா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு: பெண் கைது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (32), சரக்கு வாகன ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா... மேலும் பார்க்க

பூட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத தோ்த் திருவிழா சனிக்கிழமை வெகு விமரிசையாக தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் தோ்த் திருவிழாவையொட... மேலும் பார்க்க

ஏந்தல் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி, ஏந்தல் கிராம மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. வாணாபுரத்தை அடுத்த ஏந்தல் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மா... மேலும் பார்க்க