L.I.C: ஒன்பது மாத கால செயல்பாட்டு சிறப்பம்சங்களை வெளியிட்ட எல்.ஐ.சி நிறுவனம்
கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது!
ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தனியாா் தோட்டத்துக்கு அருகே உள்ள இடத்தில் சாராய ஊறலும், 40 லிட்டா் சாராயம் வைத்திருந்த கேனும் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து விசாரணை நடத்தினா்.
இதில், கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்தைச் சோ்ந்த சுப்பாத் தேவா் மகன் குமரேசன் (50) கள்ளச் சாரயம் காய்ச்சி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.