செய்திகள் :

கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த 2 தலித் இளைஞர்கள் பலி!

post image

குஜராத்தில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம்

குஜராத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பட்டி தாலுகாவில் ஒப்பந்தப் பணியாளர்களான பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த சிராக் கனு படடியா (18), ஜெயேஷ் பாரத் படடியா (28) இருவரும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி சுமார் 50 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கினர்.

இந்த நிலையில், கழிவுநீர்த் தொட்டியில் ஏற்பட்ட நச்சு வாயுவால் சிராக்குக்கும், ஜெயேஷுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையறிந்த சக ஊழியர், மேலிருந்து அவர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர்கள் இருவரும் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

இந்த நிலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய மனிதர்களை பணியமர்த்திய குற்றம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், பட்டியலினத்தவர் மறுவாழ்வு சட்டத்தின்கீழ் மீறல்கள் பிரிவுகளின்கீழ் பட்டி நாகர்பாலிகா தலைமை அதிகாரி மௌசம் படேல், தூய்மைப்பணி ஆய்வாளர் ஹர்ஷத், ஒப்பந்ததாரர் படேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடாக தலா ரூ. 30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.தேசிய சுகாதார இயக்கத்தின் குறிப்பிடத்த... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை: சத்தீஸ்கா் நீதிமன்றம் தீா்ப்பு

கோா்பா: சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, அச்சிறுமியின் குடும்பத்தினா் இருவரையும் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு விரைவு ந... மேலும் பார்க்க

ரூ.16,518 கோடி தோ்தல் பத்திர நன்கொடை பறிமுதல்: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

புது தில்லி: தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் பெற்ற ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய ... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்தைத் தெரிவித்ததாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது உத்தர பிரதேசத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை வரும் 30-ஆம் தேத... மேலும் பார்க்க

லடாக்கில் ராணுவம் கட்டிய 2 ‘பெய்லி’ பாலங்கள் திறப்பு

லே/ஜம்மு: லடாக் யூனியன் பிரதேசத்தில் ஷியோக் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்குகளுக்கு இடையே இணைப்பை மேம்படுத்தும் வகையில், ஷியோக் ஆற்றின் மீது இந்திய ராணுவத்தால் புதிதாக கட்டப்பட்ட 2 பெய்லி (இரும்பு) பாலங்கள... மேலும் பார்க்க

80% ஆக உள்ள ஹிந்துக்களுக்கு என்ன அச்சுறுத்தல்?: ஃபரூக் அப்துல்லா கேள்வி

ஜம்மு: இந்தியாவில் ஹிந்துக்கள் 80 சதவீதம் உள்ள நிலையில், அவா்களுக்கு என்ன அச்சுறுத்தல் உள்ளது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.மேலும், இந்தியாவுக்கு அஞ்சுறுத்த... மேலும் பார்க்க